Tamilnadu
செய்வினை பூஜை செய்வதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை.. போலி மந்திரவாதி போக்சோ சட்டத்தில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், மணலோடை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் பில்லி சூனியம், செய்வினை எடுப்பது போன்ற மாந்திரிக பூஜை செய்து வருகிறார். இதனால் இவரைப் பலரும் சந்தித்துச் செல்வது வழக்கம்.
இப்படி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சேகரை சந்தித்துள்ளார். அப்போது 'தனது இரண்டு மகள்களுக்கும் உடல் நிலை சரியில்லை. பல மருத்துவர்களை பார்த்தும் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை' என கூறியுள்ளார்.
அப்போது மந்திரவாதி சேகர், 'உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் வீட்டில் இரண்டுநாட்கள் விடிய விடியப் பூசை செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.
இதை நம்பி தொழிலாளியும் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அப்போது மந்திரவாதி தொழிலாளியின் மகளைத் தனியாக அழைத்து, 'நான் சொல்வதுபடி நீ கேட்டாள் உனது குடும்பம் நன்றாக இருக்கும்' என கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இது குறித்து வெளியே சொன்னால் செய்வினை செய்து குடும்பத்தை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி இது குறித்து எதுவும் பெற்றோர்களிடம் கூறவில்லை. இதையடுத்து சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு சிறுமி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இது குறித்து அறிந்த போலிஸார் மந்திரவாதி சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !