Tamilnadu
ஆட்டை கடித்ததால் நாய் அடித்துக் கொலை.. 2 பேர் கைது : நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று ஆட்டை கடித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாஸ் மற்றும் உடன் இருந்த குமார், இசக்கி முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு ஆட்டை கடித்த நாயைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இவர்கள் ஆட்டை கொடூரமாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நாயைக் கொடூரமாகக் கொலை செய்த தாஸ், இசக்கி முத்து ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை போலிஸார் தேடி வருகின்றனர்.
ஆட்டை கடித்ததால் நாய் ஒன்றை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !