Tamilnadu
ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து 2 மனைவிகளுக்கு தாராளமாக செலவு செய்த திருடர் குல திலகம்; சென்னை போலிஸ் அதிரடி!
சென்னை திருவொற்றியூரில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த 4 லட்ச ரூபாய் கொள்ளை போயிருக்கிறது. திருவொற்றியூர் திருமலை அவென்யூவைச் சேர்ந்த 70 வயதுடைய பிரகாஷ் ரெட்டி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் என்ற இடத்தில் வீடு கட்டி வருகிறார்.
இந்நிலையில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த தனது நண்பர் நடராஜன் என்பவரிடம் வீடு கட்ட ரூபாய் 4 லட்சம் பணம் கேட்டுள்ளார். நடராஜன் திருவெற்றியூர் பெரியார் நகரில் உள்ள எச்.டி.எப்.சி தனியார் வங்கியில் இருந்து ரூபாய் 4 லட்சம் பணத்தை எடுத்து பிரகாஷ் ரெட்டியிடம் கொடுத்துள்ளார்.
அதனை பிரகாஷ் ரெட்டி தனது இருசக்கர வாகனத்தில் டேங்க் கவரில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் திருவொற்றியூர் மாட்டு மந்தை அருகே உள்ள டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேறொரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
திரும்பி வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தில். பெட்ரோல் டேங் கவரில் வைத்து இருந்த ரூபாய் 4 லட்சத்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பிரகாஷ் ரெட்டி திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் CCTV பதிவுகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வெற்றி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர், எண்ணூர் சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஜித் (எ) காலா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில் கொள்ளையடித்த 4 லட்சம் பணத்தை சங்கர் தனது கூட்டாளிகள் பன்னீர்செல்வத்திடம் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும் ஆட்டோ ஓட்டுனர் அஜித் (எ) காலாவிடம் 30,000 ரூபாய் பணம் கொடுத்தாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சங்கரின் முதல் மனைவி விமலாவிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டாவது. மனைவி கவிதாவிடம் 50,000 பணமும் மற்றும் குழந்தைகளுக்கு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து 3 பேரும் தனது நண்பர்களுடன் டாஸ்மாக் பாரில் மது குடித்துவிட்டு தெரிந்த நபர்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தாராளமாக பணத்தை செலவு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து சங்கர் மனைவியிடம் கொடுத்த பணத்தை பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகன பெட்ரோல் டேங்க் பையில் வைத்திருந்த 4 லட்ச ரூபாய் கொள்ளை போன சம்பவத்தில் 24 மணி நேரத்தில் மூன்று பேரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த காவலர்களின் செயல் பொதுமக்களை பாராட்டை பெற்றுள்ளது
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?