Tamilnadu
திருச்சியில் டீசலுக்கு பணம் கேட்டபோது நடந்த துணிகர சம்பவம் : போலிஸ் சொல்லும் தகவல்!
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் முசிறியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ரூ. 2 ஆயிரத்திற்கு டீசல் நிரப்பியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசலுக்கான காசு கெட்டபோது அவர், திடீரென வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்சி - சேலம் சாலையில் சண்முகம் செல்வது போலிஸாருக்கு தெரியவந்தது. பிறகு அந்த சலையில் பேரிகார்டுகளை வைத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, சண்முகம் ஜீப்பிலிருந்து இறங்கித் தப்பித்து ஓடினார். இவரை துரத்திச் சென்ற போலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரனாகப் பேசியதால் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் டீசலுக்கு பணம் தராமல் தப்பிச் சென்றவரை மடக்கிப் பிடித்த போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!