Tamilnadu
காதலன் மீது ஆசிட் வீசிய காதலி... விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் மீது ஜெயந்தி கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து காதலன் ராஜேஷ் மீது வீசியுள்ளார் ஜெயந்தி. பின்னர் கத்தியால் அவரை குத்திவிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மீது ஆசிட் வீசி, காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!