Tamilnadu
தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் சசிகுமார். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனால், தொழில் காரணமாக சசிகுமார் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவரது தந்தை சுப்பையா திடீரென காலமானார். தந்தையின் இறப்பு செய்து குறித்து சுப்பையாவுக்கு உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தந்தையின் இறுதி நிகழ்விற்கு எப்படி செல்வது என முடிவு செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார். பிறகு சவுதியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து ரூ. 5 லட்சம் வாடகைக்குத் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை வந்தடைந்தார். அங்கிருந்து காரில் கிராமத்திற்கு வந்து அவரது தந்தையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தந்தையின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக ரூ. 5 லட்சம் செலவு செய்து தனி ஹெலிகாப்டர் மூலம் மகன் வந்த சம்பவம் அக்கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!