Tamilnadu
“பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்.. ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்கள்” : நெகிழ்ச்சி சம்பவம்!
திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிபட்டியையை அடுத்த மாயநேரியைச் சேர்ந்தவர்கள் முத்துகுட்டி - அபிராமி தம்பதி. அபிராமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனைடுத்து கணவர் முத்துகுட்டி மற்றும் உறவினர்கள் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அபிராமியை அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகம் இருந்ததைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸில் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வந்துள்ளனர். அவரை அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் சிவந்திபட்டி மலை அருகே சென்றபோது ஆம்புலன்ஸில் இருந்த அபிராமிக்கு பிரவச வலி அதிகரித்துள்ளது.
மருத்துவமனை கொண்டு செல்லும் வரை பாதுகாப்பு இல்லை என உறவினர்கள் கூறியதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸை சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆம்புலன்ஸ் ஊழியர் அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரசவம் பாதுகாப்பாக நடந்ததைத் தொடர்ந்து அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருந்ததை அறிந்து உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து இருவரையும் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மிகவும் பாதுகாப்பாக பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!