Tamilnadu
மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்த சிறுவனுக்குச் நேர்ந்த சோகம்!
சென்னை, கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சுடவைத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக தண்ணீரில் விரலை விட்டுள்ளார். அப்போது, சிறுவன் ஷியாம் மீது மின்சாரம் பாய்ந்ததில் துடிதுடித்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!