Tamilnadu
'இல்லம் தேடிக் கல்வி'... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
தமிழ்நாட்டைக் கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா தொற்றால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கும் வகையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பது வருமாறு:-
இல்லம் தேடிக் கல்வி மையங்களாகச் செயல்படும் இடங்கள் பொதுமக்கள் பார்வையில் இருக்க வேண்டும்.
குழந்தைகளிடம் பாலியல் ரீதியில் தவறான செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபடாமல் இருப்பதை பள்ளி மேலாண்மைக் குழு கண்காணிக்க வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி மையங்களாக செயல்பட உள்ள இடங்களில் 1098, 14417 எண்களை ஒட்டிவைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
மையங்களுக்கு வரும் குழந்தைகளை இனிப்பு வழங்கி வரவேற்க வேண்டும்.
கற்றல் - கற்பித்தல் பணி நடைபெறும்போது பெற்றோர்கள் உடனிருந்து கண்காணிக்கலாம்.
கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பர் பயிற்சியை நிறைவு செய்த தன்னார்வலர்கள் உடனடியாக மையங்களைத் தொடங்கி கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மையம் தொடங்கும் போது தன்னார்வலர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!