Tamilnadu
அரசை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க மாநில நிர்வாகி கைது.. போலிஸார் நடவடிக்கை!
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம் என்றும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்தனர்.
பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம், திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் இன்று அகோரத்தை கைது செய்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!