Tamilnadu
“எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு.. நீங்க ஏன் வர்றீங்க..": OPS-ஐ காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்!
வடகிழக்குப் பருவமழை சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னை நகரின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கெல்லீஸ் பி.ஆர்.கார்டன் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அப்போது பொதுமக்கள் அவரைச் சூழ்ந்து கடந்த ஆட்சியில் ஒன்றும் செய்யாமல் இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
“எங்களுக்கு எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு. இப்போ மட்டும் ஏன் வர்றீங்க” என அப்பகுதி மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை காரோடு முற்றுகையிட்டனர்.
பல்வேறு விவகாரங்களைச் சுட்டிக்காட்டி மக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்ததால் ஓ.பன்னீர்செல்வம் காரை விட்டே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அ.தி.மு.கவினர் மக்களை அமைதிப்படுத்த முயற்சித்தும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
சென்னையில் பிராட்வே, துறைமுகம், மண்ணடி, சென்ட்ரல், புரசைவாக்கம், கெல்லீஸ், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதால் அப்பகுதிகளில் தி.மு.கவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது.
அப்பகுதிக்கு சென்று முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களின் கடும் எதிர்ப்பால் காரை விட்டு கீழே இறங்க முடியாமல் திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!