Tamilnadu
ஆட்டுக் குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்.. ஆரணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா லஷ்மி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆடு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதேபோல் நாயும் அதேநோளில் குட்டிகளை ஈன்றது.
இதையடுத்து ஆட்டுக்குட்டிகளுக்கு, தாய் ஆடு சரியாகப் பால் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பால் கிடைக்காமல் பசியால் வாடிய குட்டி ஆடுகள், நாயிடம் பால் குடித்துள்ளன. அப்போது நாய் எந்தவிதமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதைப் போலவே ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது.
இந்த ஆச்சரியத்தைப் பார்க்கக் கிராம மக்கள் ஒவ்வொருவராக மல்லிகா லக்ஷ்மியின் வீட்டிற்கு வந்து ஆட்டுக்கூட்டிக்கு நாய் பால் கொடுப்பதை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!