Tamilnadu
4 ஆண்டாக தொடர் கைவரிசை.. மர சிலைகளை குறிவைத்து திருட்டு - விசாரணையில் குற்றவாளிகள் ‘பகீர்’ தகவல்!
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது வீட்டு வரவேற்பு அறையில் மரத்தால் செய்யப்பட்ட 2 அடி உயர விநாயகர் சிலை ஒன்றை வைத்திருந்தார். இந்த சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கோபிநாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை செய்தனர்.
இந்நிலையில் மரத்தால் செய்யப்பட்டன சிவன் சிலையை திருடியதாக ஆயிரம் விளக்கு போலிஸார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாகச் சேத்துப்பட்டு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேத்துப்பட்டு போலிஸார் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்று பிடிபட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சிட்டி சென்டர் பகுதியைச் சேர்ந்த முத்து, ஆலந்தூரை சேர்ந்த தமீம் அன்சாரி ஆகிய இரண்டு பேர் 4 ஆண்டாக தொடர்ந்து மரத்தால் செய்யப்பட்ட சிலைகளைத் திருடி பணக்காரர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் முத்து என்பவர்தான் கோபிநாத் வீட்டிலிருந்த விநாயகர் சிலையைத் திருடியது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் முத்து சிலைகளைத் திருடி அதை தமீம் அன்சாரியிடம் கொடுப்பார். இந்த சிலைகளை அவர் பணக்கார்களக்கு அதிக விலைக்கு விற்று விடுவார். இவர்கள் மீது தேனாம்பேட்டை, அபிராமபுரம், மயிலாப்பூர் ஆகிய காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதையடுத்து முத்துவிடம் இருந்த விநாயகர் சிலையைப் பறிமுதல் செய்து அதை கோபிநாத்திடம் போலிஸார் ஒப்படைத்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!