Tamilnadu

எஞ்சினில் குடைச்சல்; ஷாக்கான மெக்கானிக்; R15ல் குடியிருந்த பாம்பு பிடிபட்டது எப்படி? தென்காசியில்பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் பகுதியை சேர்ந்த லத்திஸ் என்பவரது இருசக்கர வாகனத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து அடிக்கடி சத்தம் வந்ததை கண்ட அவர் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு பழுது நீக்குவதற்காக வாகனத்தை விட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மெக்கானிக் இருசக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்து கொண்டிக்கும் போது உள்ளே பாம்பு இருப்பதைக் கண்ட அவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தை விசாலமான இடத்திற்கு கொண்டு சென்று அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை உயிருடன் மீட்டனர்.

உயிருடன் மீட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்ததாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பாம்பை காட்டுப்பகுதிக்குள் விட்டனர் இதனையடுத்து இரு சக்கர வாகன உரிமையாளர் லத்தீஸ் தீயணைப்பு துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தார்...

Also Read: மோசடி புகாரில் போலிஸிடம் சிக்காமலிருக்க பட்டினி; தடுப்பூசி ஆவணத்தால் சிக்கிய பலே கில்லாடி.. நடந்தது என்ன?