Tamilnadu
திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்... நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். காரில் கனிமொழி, சுமலதா, ரிஷிகா ஆகிய மூன்று பேர் இருந்துள்ளனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.
இதில் காரை ஓட்டிவந்த சீனிவாசலு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து சீனிவாசலுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த சீனிவாசலுவுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
திருமணம் முடிந்த ஒரே நாளில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !