Tamilnadu

"தக்காளியைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை": அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் எச்சரிக்கை!

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தக்காளியைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை காரணமாகத் தக்காளி வரத்து குறைத்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது.

விலை உயர்வைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தக்காளியைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. உற்பத்தியாகும் காய்கறிகளைச் சந்தைக்கு எடுத்து வருவதற்கு வாகன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: #தக்காளி_இல்லாமல் : கண்ணைக் கட்டும் தக்காளி விலையேற்றம் - Googleஐ கேள்வி கேட்கும் மக்கள்!