Tamilnadu
அரசு வேலை மோசடி; பணம் வாங்கியதோடு கொலை திட்டமும் தீட்டியுள்ளார் ராஜேந்திர பாலாஜி - தமிழ்நாடு காவல்துறை
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இரு வழக்கிலும் முன் ஜஈமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால், அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துடன், அதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ?” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் : தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் உறுதி!
-
”ராஜேந்திர பாலாஜி பேச்சில் காமெடி இருக்கும்! உண்மை இருக்காது!” : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!
-
”மாற்றுத்திறனாளிகளை அவமதித்து பேசுவது தண்டனைக்குரிய குற்றம்” : அ.தி.மு.க நிர்வாகிக்கு தீபக் கண்டனம்!
-
“ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்!” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!