Tamilnadu

"ஓ.பி.எஸ் குடும்பத்துக்கு முறைகேடாக அரசு நிலம் விற்பனை":செல்லூர் ராஜு மீது விசாரணை-ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

சென்னை கோயம்பேடு அருகேயுள்ள பத்தரை ஏக்கர் அரசு நிலத்தை அ.தி.மு.க. இணை அமைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட் டோர் சட்டத்திற்குப் புறம் பாக விற்பனை செய்ததால் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நேரில் வாக்குமூலம் அளித்தார்.

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அளித்திருந்த புகார் தொடர்பாக தி.மு.க.வின் அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை கிண்டியில் நேரில் சென்று விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகிய மூவரும் கூட்டாக சதி செய்து அரசாங்கச் சொத்தை விற்றதால் ஏற்பட்ட மோசடி குறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த ஏப்.5-ஆம் தேதி தி.மு.க. சார் பில் புகாரளித்தேன். அதன் அடிப்படையில் மேல் விசாரணைக்கு இன்று அழைத்திருந்தார்கள்.சம்மன் வாங்கி ஆஜர் ஆகி வாக்குமூலம் அளித்தேன்.

கோயம்பேடு பூந்தமல்லி சந்திப்பில் பத்தரை ஏக்கர் நிலம்!

கோயம்பேடு அருகே அரசுக்கு சொந்தமான பத்தரை ஏக்கர் இடத்தை கடந்த 8.2.21 அன்று, அதாவது தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக 10,15 நாட்களுக்கு முன்பாக அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்தி, சுயலாபத்துடன் விற்பனை செய்ய அ.தி.மு.க. அரசு சார்பில் உத்தரவு போட்டனர். சட்டப்படி அரசு இடத்தை தனியாருக்கு விற்கக் கூடாது, மருத்துவமனை உள்ளாட்சி கட்டடம், கல்லூரி, பள்ளி கட்டுமானத்திற்காக மட்டுமே தனியாருக்கு வழங்கலாம். ஏலத்தில் வேண்டுமானால் விற்கலாம். ஆனால் ஜெயலலிதா வழயில் இவர்கள் அந்தச் சட்டத்தை மீறி இடத்தை விற்பனை செய்துள்ளனர்.

10.5 ஏக்கர் இடத்தை தனியார் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளனர். பூந்தமல்லி நெடுஞ் சாலை - கோயம்பேடு சந்திப்பு அருகேயுள்ள இந்த இடத்தை சதுர அடி 12,500க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால்அந்த இடத்தில் ஒரு சதுர அடி ரூ.25,000 மார்க்கெட் மதிப்பாகும்.

ஓ.பி.எஸ்.சின் மகன்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம்!

ஓ.பி.எஸ்.-சின் 3 பிள்ளைகள் பங்குதாரராக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனம் தான் இந்த தனியார் நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயரிலான காரைத்தான் ஓ.பி.எஸ் .உட்பட அவரது குடும்பத்தினர் பயன்படுத் துகின்றனர்.

இதன் காரணமாக அரசுக்கு ரூ. 500 கோடி இழப்புஏற்பட்டது. நிலம் விற்பனை செய்வதற்கு துறையின் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் இதற்குக் காரணமாக இருந்துள்ளார். நிலத்தை விற்பனை செய்த ஒரே வாரத்தில் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் கிடைத்துள்ளது. திட்டமிட்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்த மூவரும் குற்றவாளிகள் என புகார் தந்தேன்.

நான் அளித்த புகாரின்ஆதாரம் தொடர்பாக இங்கு வெளிப்படையாக கூற முடியாது. வேலுமணி மீதும் லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கும் நான் தொடுத்தேன். அந்த புகரில் லஞ்ச ஒழிப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

செல்லூர் ராஜூ வாங்கிய வணிக வளாகங்கள்!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைகால் தெரியாமல், பின்விளைவு தெரியாமல் , அதிகம் பேசி வருகிறார். எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாகவே இருந்தவர் துரைமுருகன் , அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட அவரை ‘காடு வா..வா' என அழைப்பதாக அவர் விமர்சித்து வருகிறார்.

இதேபோல்தான் கருணாநிதியை மூட்டைகட்டி எடுத்து வருவார்கள் என ஜெயலலிதா பேசியிருந்தார். ஆனால் கருணாநிதி எவ்வளவு காலம் வாழ்ந்து இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். செல்லூர் ராஜு வாங்கியுள்ள வணிக வளாகங்களை மதுரையில் நேற்று பார்வையிட்டேன். விரைவில் அவர் மீதும் புகார் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Also Read: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி... ராஜேந்திரபாலாஜி மீது போலிஸார் வழக்குப்பதிவு!