Tamilnadu
அமைச்சர் காந்தி எடுத்த துரித நடவடிக்கை.. வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்களை பத்திரமாக மீட்ட மீட்பு குழு !
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மாமண்டூர் கிராமக் காலனியைச் சேர்ந்தவர்கள் சின்ராஜ், சுபாஷ், அமுதன், கோகுல், விஸ்வநாதன், நந்தகுமார், ரமேஷ் ஆகிய 7 பேரும், ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்தேசம் புதூர் பகுதியில் ஒடும் பாலாற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர்.
குளித்துக் கொண்டு இருந்தப் போது பாலாற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. அதனால் அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞர்கள் செய்வதறியாமல் மேடான பகுதிக்கு சென்று நின்று விட்டனர். மேலும், தொடர்ந்து பாலாற்றில் வெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து ஒடியதால் கரைக்கு வர முடியாமல் இளைஞர்கள் தத்துளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதை வேடிக்கைப் பார்க்க வந்த கிராம மக்கள் உடனடியாக பிரம்மதேசம் போலிஸூக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு, தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் என்.விஜயராஜ், செய்யாறு டி.எஸ்.பி.செந்தில், வெம்பாக்கம் வட்டாட்சியர் சத்தியன் ஆகியோர் விரைந்து வந்து வெள்ளத்தில் சிக்கித் தவித்த 7 இளைஞர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் அரக்கோனம் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த 15 பேர் மற்றும் செய்யாறு, இராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினர் இணைந்து விரைவாக செயல்பட்டு பாலாற்றுப் பகுதியில் படகை செலுத்தி வெள்ளத்தில் சிக்கித் தவித்த 7 இளைஞர்களை சுமார் 3 மணி நேரம் போராடி பின்பு பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!