Tamilnadu
“கனமழையால் வீட்டின் மீது சரிந்து விழுந்த ராட்சத பாறை.. 2 பேர் உடல் நசுங்கி பலி” : வேலூரில் நடந்த சோகம்!
வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் காகித பட்டறை பகுதியில் தொடர் மழையால் மண் சரிந்து அப்பகுதியில் இருந்த பெரிய பாறை மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்தது. ஏற்கனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அங்கே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மலைப்பகுதியில் வீடுகட்டி வசித்து வந்த, நிஷாந்தி, ரமணி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வசித்து குடிசை வீட்டின் மீது 15 டன் அளவுள்ள பெரிய பாறை ஒன்று வீட்டில் விழுந்து நசுங்கியது. பாறைக்கடியில் 2 பேர் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணிகள் நடந்தது. இதில் ரமணி, நிஷாந்தி உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!