Tamilnadu
”மழைக் காலமும் மாநகராட்சியின் அறிவுரைகளும்” - பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
* மழை, வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட 20 நொடிகள் முறையாக அடிக்கடி சோப்பு உபயோகப்படுத்தி கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
* குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து பருகவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும்.
* பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும். திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.
* காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை/மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயசிகிச்சை செய்யக் கூடாது.
* வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் (ORS Solution) மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும், உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
* குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகைப்பிரித்து தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
விஜய் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் கொடுத்த அடி : கரூர் நெரிசல்... அரசுப் பணி ரத்து!
-
த.வெ.க அரசின் 24 மணி நேர வேலை இதுதான் : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?
-
மேகதாது அணை விவகாரம் - “லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது” : ரகுபதி பதிலடி!
-
தவெக நிர்வாகிகள் மீது குவியும் பாலியல் புகார்கள் - இதுதான் பெண்கள் பாதுகாப்பா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் : உதயநிதி ஸ்டாலின் அதிரடி!