Tamilnadu
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.. 3வது நாளாக தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கிய முதலமைச்சரின் சகோதரி!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதல்வியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரியுமான திருமதி. செல்வி செல்வம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3வது நாளாக இன்றும் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மழைநீர் தேங்கிய சாலைகளில் நடந்து சென்று பாதிப்புகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். தி.மு.க நிர்வாகிகள் பலரும் சென்னை முழுக்க நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதல்வியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரியுமான திருமதி. செல்வி செல்வம் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக உணவு மற்றும் பால், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
அப்போது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி செயலாளர் மாபா.அன்புதுரை, நுங்கை வி.எஸ்,ராஜ் பா.ராபர்ட் மற்றும் வட்ட செயலாளர்கள் எப்.பீட்டர்ஜான், கோ.யுவராஜ், ஆர்.பாபு, எஸ்.சத்திய பெருமாள், மு.வெங்கடேஷ் கோ.ரவி, பா.மகேஷ், புக.சாமுவேல் மற்றும் மாவட்ட பிரதிநிதி தவமணி மற்றும் கழக முன்னணியினர் உடனிருந்தனர்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!