Tamilnadu
குடித்துவிட்டு தகராறு செய்த இளைஞர் கொலை.. 3 பேர் கைது: நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சி.எச்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இளைஞரான இவர் தினமும் குடித்து விட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் சுதாகர் வீட்டாருக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் லோகநாதன் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் சுதாகர் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு லோகநாதன் வீட்டின் முன்பு நின்று கொண்டு தகராறு செய்துள்ளார். மேலும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி லோகநாதன் குடும்பத்தினரைத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுதாகரை கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதில் மயங்கி கீழே விழுந்து சுதாகரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து சுதாகரை தாக்கிய லோகநாதன்,ஹேமநாதன், பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!