Tamilnadu
”தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட தீவிரமடையும்” - இந்திய வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும். இதன் காரணமாக தெற்கு மற்றும் உள் தமிழ்நாடு மாவட்டங்களில் அடுத்த இரண்டு வாரம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யகூடும்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வந்த நிலையில், அடுத்த இரண்டு வாரத்திற்கான மழை குறித்த வானிலை முன்னறிவிப்பு அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வரும் வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் மழை இயல்பை ஒட்டி இருக்க வாய்ப்புள்ளது எனவும், அதன் பிறகான வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, தமிழ்நாட்டின் வட கடலோர பகுதி வெளிப்புறம், உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை இந்திய நிலப்பரப்பில் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பான அளவைவிட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது. அதேபோல் கடந்த வாரத்தில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!