Tamilnadu
”நீட்’க்கு எதிரா பேச தைரியம் இல்ல; இதுக்கு போராட வந்துட்டீங்க” - அதிமுகவை சாடிய அமைச்சர் துரைமுருகன்!
நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலவிவரும் இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளில் நிலை குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார். இன்று முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை பற்றி பலவிதமான செய்திகள் தமிழ்நாட்டை உலாவிக் கொண்டிருப்பதாகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்து அவர்கள் தரப்பு அறிக்கைகளை தெரிவித்திருப்பதாக கூரிய அவர், முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் அணையின் நிலவரம் குறித்து தெரியாமல் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா? என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!