Tamilnadu
“பட்டாசு வெடிக்க முடியாதா? - தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு” : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில், வரும் நவம்பர் 5ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 2ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கும், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தீப ஒளித் திருநாளான நவம்பர் 4ம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!