Tamilnadu
ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை : 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது - நடந்தது என்ன?
தஞ்சாவூர் அருகே இளம்பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். பின் இரவு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில், இளம்பெண் உடைகள் கலைந்த நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலிஸார் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது மீன்பிடி தூண்டில் இருந்துள்ளது.
அதைக் கொண்டு விசாரணை செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் சதீஷ் என்ற இரண்டு இளைஞர்கள் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது, வடவாறு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பெண் தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததால், அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இரண்டு இளைஞர்களையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து 12 மணி நேரத்திலேயே போலிஸார் குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!