Tamilnadu
தனியாக இருந்த மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. நண்பருடன் சேர்ந்து இளம்பெண் நடத்திய ‘பகீர்’ கொள்ளை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்துவருபவர் மாரியம்மாள். இவர் கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு 8 மணியளவில், வீட்டிலிருந்த மாரியம்மாளை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கூச்சலிட்ட மாரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்துவந்த போலிஸார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாரியம்மாளின் வீட்டில் அருகில் உள்ள ராணி என்பவர் மீது சந்தேகமடைந்து அவரை அழைத்து விசாரணை நடத்தியதில், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மாரியம்மாளைத் தாக்கி, நகை பறித்துச் சென்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து ராணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!