Tamilnadu
கைக்குழந்தையுடன் பேருந்துகளுக்கு இடையே சிக்கி உயிர்தப்பிய தம்பதி... பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தையுடன் சென்ற தம்பதியினர், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள கல்மண்டபம் என்ற கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பேருந்தை முந்திச் சென்றார்.
அப்போது, எதிர்த்திசையில் மற்றொரு பேருந்து வந்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த நபர், இரண்டு பேருந்துகளுக்கும் இடையே இருசக்கர வாகனத்தை தடுமாறி நிறுத்தினார்.
அப்போது இருசக்கர வாகனம் பேருந்துகளில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் நூலிழையில் உயிர் தப்பினர்.
பெரும் விபத்திலிருந்து குழந்தை உட்பட மூவர் தப்பிப்பிழைத்தது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பான பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!