Tamilnadu

மீண்டும் மணியா? கைதட்டலா? : பிரதமர் மோடி 10 மணி பேச்சின் முக்கிய அம்சங்கள் என்ன?

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடிக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய நாடிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் அடுத்ததடுத்து பண்டிகை காலம் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். அதேவேளையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ கடந்த ஆண்டு தீபாவளி கொரோனா தொற்றால் உற்சாகமாக கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்போது தடுப்பூசியால் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இருப்பினும் கொரோனாவுக்கு எதிரான இந்தபோராட்டம் முடியவில்லை. எனவே மக்கள் முகக்கவசத்தை மறக்கவேண்டாம். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை தமது வழக்கமாக கொண்டிருக்கவேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்” : 4 பேர் படுகாயம் - நடுக்கடலில் நடந்தது என்ன ?