Tamilnadu
"கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவர், மகன்” : போலிஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
நெல்லை மாவட்டம், ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சங்கரம்மாள். இந்த தம்பதிக்குத் தளவாய் என்று மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரம்மாள் கட்டிலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக அவரது கணவன் முருகன் மற்றும் மகன் ஆகியோர் ஊர்மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலிஸார் முருகன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது சங்கரம்மாள் மூக்கில் ரத்தக் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் சங்கரம்மாளின் கணவர் மற்றும் மகனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், கணவன் மற்றும் மகன் இருவரும் சேர்ந்து சங்கரம்மாளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
மகன் தளவாய்க்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். மகன் கல்லூரி படித்து வந்ததால், சங்கரம்மாள் மகனையும், மருமகளையும் சேரவிடாமல் பிரித்து வைத்திருந்துள்ளார். மேலும் செல்போனில் பேசுவதற்கு தடைபோட்டுள்ளார். இதனால் தாய் மீது மகன் கோபமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மகனுக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகனும், தந்தையும் சேர்ந்து சங்கரம்மாளை தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த சேலையை எடுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பிரேத பரிசோதனையிலும் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு சங்கரம்மாள் உயிரிழந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலிஸார் சங்கரம்மாளின் மகன் தளவாய் மற்றும் கணவன் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!