Tamilnadu
காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு.. கணவனை கைது செய்த போலிஸ் - தேனி அருகே நடந்தது என்ன?
தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் முத்துலட்சுமி திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக முத்துலட்சுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆகியிருப்பதால் இந்த வழக்கை பெரியகுளம் சார் ஆட்சியர் விசாரணைக்கு போலிஸார் பரிந்துரைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சார் ஆட்சியர் ரிஷப் விசாரணை மேற்கொண்டார். இதில், கணவன் பிரபாகரன் மற்றும் அவரது தாய் பிச்சையம்மாள் ஆகியோர் தொடர்ச்சியாக முத்துலட்சுமிக்கு வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் முத்துலட்சுமியின் கணவர் பிரபாகரனைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிச்சையம்மாளை தேடிவருகின்றனர். வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!