Tamilnadu
உஷார்.. இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால் வெடித்து சிதறிய செல்போன் - இளைஞருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?
கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சிவராம். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு தனது அறையில் படுத்துக் கொண்டே செல்போனை பயன்படுத்தியுள்ளார். பிறகு செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
இதையடுத்து அதிகாலையில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் படுத்துக் கொண்டிருந்த சிவராமன் மீது தீ பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் தீ பரவியது.
பின்னர், வெடிசத்தம் கேட்டு அறைக்கு வந்த பெற்றோர் மகன் தீயில் எறிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயை அணைத்து சிவராமனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராமன் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!