Tamilnadu
அமைச்சராக இருந்த போது விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? - அதிரவைக்கும் FIR தகவல்!
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.
இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. புதுக்கோட்டை உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலிஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்லர் முதல் மார்ச் வரை கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, விஜயபாஸ்கர் தன் மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், இந்த லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது. இதில் சுமார் 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி பணம் சம்பாரித்துள்ளார்.
இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையில் தாக்கல் விஜயபாஸ்கரின் சொத்து விவரங்கள் குறித்து தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டடுள்ளது. அதன்படி அந்த அறிக்கையில், ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று வாங்கியுள்ளார்.
ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளை வாங்கி குவித்துள்ளார். மேலும் ரூ. 28 கோடிக்கு பல நிறுவனங்களில் முதலீடு செய்டுள்ளார். அதுமட்டுமல்லாது, காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார்.
அதேபோல், சென்னை தி.நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். மேலும் தனது சொந்த ஊரில் உள்ள வேலைகளுக்கு ரூ.6.6 கோடிக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி ஆகியவை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், வருமான வரித்துறை கணக்கின் படி, கடந்த 5 ஆண்டில் விஜயபாஸ்கரின் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. ஆனால் 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளதாகவும்கூறப்படுகிறது.
இதில் விஜயபாஸ்கரும், மனைவி ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். ஆனால், அவர்கள் வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!