Tamilnadu
“பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்” : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். குடிபோதைக்கு அடிமையான சதீஷ், தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சதீஷ் அவரது அம்மா அம்சாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், பெற்ற தாய் என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போது மயங்கி கீழே விழுந்த அம்சா பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். ஆனால் அடித்தபிறகு எதையுமே கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு சதீஷ் வெளியேறியுள்ளார். சண்டை நடைபெற்றதை அறிந்து வீட்டுக்குள் வந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த அம்சாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அம்சா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அம்சாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடுங்கையூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்துசதீஷை கைது விசாரணை நடத்தியதில் அம்சாவை கன்னத்தில் அறைந்தது மட்டுமின்றி, கழுத்தையும் நெரித்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து தாயை கொலை செய்த வழக்கில் போலிஸார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!