Tamilnadu

முதல் தேர்தலிலேயே அசத்திய PhD பட்டதாரி... எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேருக்கும் டெபாசிட் காலி!

ஸ்ரீபெரும்புதூரில் 27 வயதான பிஎச்.டி பட்டதாரியான தி.மு.க வேட்பாளர் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 10-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு 27 வயதான பிஎச்.டி பட்டதாரி அந்தோணி வினோத்குமார் தி.மு.க சார்பில் போட்டியிட்டார்.

அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ.க-வைச் சேர்ந்த பாபு போட்டியிட்டார். இவரை ஆதரித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், ஆண்டனி வினோத்குமார் 1,976 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் உட்பட 8 பேரும் டெபாசிட் இழந்தனர்.

பிஎச்.டி பட்டதாரியான அந்தோணி வினோத்குமார் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இதில் இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 8 பேரையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Also Read: ‘ஒத்த ஓட்டு பாஜக’ ட்ரெண்டுக்கு முன்னோடியே அண்ணாமலைதான்.. அரவக்குறிச்சியில் அசிங்கப்பட்ட கர்நாடக சிங்கம்!?