Tamilnadu
"எதிர்த்தவர்கள் டெபாசிட் காலி".. 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 90 வயது மூதாட்டி!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை தொடங்கி விடிய விடிய எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் இருக்கிறார்கள், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கிய வேட்பாளரும் உண்டு. இப்படிப் பல ருசிகரமான நிகழ்வுகள் இந்த தேர்தலில் நடந்துள்ளது.
அந்த வகையில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டியான பெருமாத்தாள் என்பவர் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். மேலும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.
மூதாட்டி பெருமாத்தாள் தி.மு.க பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊராட்சித் தலைவர் பதவிக்கான வெற்றி சான்றிதழை மகிழ்ச்சியுடன் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் மூதாட்டி, "வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி. தனது ஊராட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!