Tamilnadu
“3 ஆண்டுகளில் சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு அகழ்ந்தெடுக்கும் பணி நிறைவடையும்”: அமைச்சர் KN.நேரு தகவல்!
சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணியை நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொண்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள 34.02 லட்சம் கன மீட்டர் குப்பைகளை ரூபாய் 350 கோடி செலவில் அகழ்ந்தெடுக்கும் பணி 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொடுங்கையூரிலும் இதேபோன்று பணிகள் நடைபெறவுள்ளன. இனி வரும் காலங்களில் குப்பைகளை கொட்டும்போதே மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என பிரித்தெடுக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 2 கோடி டன் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதில் 44 இடத்தில் குப்பைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு 164 ஏக்கர் நிலம் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 55 லட்சம் டன் குப்பைகள் அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை விட குப்பைகளால் வரும் சுகாதார சீர்கேடுகளை தடுப்பதே முக்கியமாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகள் அகழ்ந்தெடுக்கும் பணி சென்னை மக்களுக்கு விடியல். இந்த இடத்தை பசுமை நிலமாக மாற்றும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டம் சோழிங்கநல்லூர் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் சென்னை மக்களுக்கும் கனவுத் திட்டம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெருங்குடி குப்பை கிடங்கு அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். தி.மு.க அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!