Tamilnadu
அறையில் நகை, பணத்தை குவித்த வடமாநில கொள்ளை கும்பல்: என்கவுன்டருக்கு பின் போலிஸார் கிடுக்குப்பிடி விசாரணை!
காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அடுத்த பென்னாலூர் பகுதியில் நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்களின் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் உள்ளே நுழையாத வண்ணம் தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பென்னலூர் பகுதியில் கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையன் நைம் அத்தர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் கடந்த 4ஆம் தேதி ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் துளசிதாசன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களின் தொடர்பிருப்பதை போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் கடந்த 4ஆம் தேதி திருப்பெரும்புதூர் பகுதியில் அம்பிகா என்ற பெண்ணிடம் பறிக்கப்பட்ட செயின் போலிஸ் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு வடமாநில கொள்ளையன் முர்தாசவிடம் இருந்து போலிஸார் பறிமுதல் செய்து உள்ளதாகவும் இதுபோன்று திருப்பெரும்புதூரில் பல்வேறு சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
இவர்களைப் போன்று வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் வேறு யாராவது உள்ளார்களா என்று கோணத்தில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தங்கி வேலை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் குறித்த பதிவுகளை ஆராய்ந்ததில் என்கவுண்டர் செய்யப்பட்ட கொள்ளையன், நைம் உட்பட மூவர் என தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்ததில் அங்கு ஏராளமான பணம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!