Tamilnadu
வீட்டுக்குள் சென்ற தாய் வருவதற்குள் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்... விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் மாவட்டம், பெரிய முதலியார் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சத்திகுமார். இவரது மனைவி மனோன்மணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 2 வயதில் வித்தியஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் மனோன்மணி வீட்டின் வெளியே குழந்தை வித்தியஸ்ரீயை தூக்கிவத்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தைக்குத் தாகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை இறக்கிவிட்டு தண்ணீர் எடுத்துவர மனோன்மணி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை வித்தியஸ்ரீ காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளார். பிறகு வீட்டின் அருகே உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது குழந்தை வித்தியஸ்ரீ நீச்சல் குளத்தில் மிதந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு அழுதுள்ளார். இவரின் குரல் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் நீச்சல் குளத்திலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தபோது குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!