Tamilnadu
“கேன்சர் நோயால் அவதிப்பட்ட மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தந்தை” : எடப்பாடி அருகே நடந்த சோகம்!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சி குடைக்காரன்வளவு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வண்ணத்தமிழ் (14). கடந்த ஓராண்டுக்கு முன்பு சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தினால் கடந்த ஓராண்டாக எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கேன்சர் நோய் வந்து பெரும் அவதிக்குள்ளாகிய வண்ணத்தமிழ் வீட்டில் உறங்காமல் கூச்சலிட்டுக் கொண்டே வந்துள்ளார். இதனைக் கண்டு தாங்க முடியாத அவரது தந்தை பெரியசாமி தனது உறவினர் பிரபு என்பவரை வழவழைத்து விஷ ஊசி போட்டு கொன்றதாக கூறப்படுகிறது.
இத்தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலிஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சிறுவனுக்கு விசஊசி தான் போடப்பட்டதா ? அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து கொங்கணாபுரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையே மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
NIA வழக்குகளில் தனி நீதிமன்றம் அமைத்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு !
-
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு - முதலமைச்சர் கண்டனம் !
-
நிர்மலா சீதாராமனுக்கு இது புரியாது, ஏனெனில் அவருக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை - முரசொலி விமர்சனம் !
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!