Tamilnadu

கடைசி நேரத்திலும் ஊழலை கைவிடாத எடப்பாடி பழனிசாமி; தகுதியில்லாதவர்களை CMDAல் பணியமர்த்திய அதிமுகவினர்?

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் தான் எடப்பாடி பழனிசாமி அரசால் CMDAக்கான பணிநியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜூனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஃபீல்ட் மேன் உள்ளிட்ட 131 காலி பணியிடங்களுக்கு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதற்கு 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.

அதில், தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்ட 18 பேர் அரசு அறிவிக்கப்பட்ட எந்த தகுதிக்கும் உற்றவர்கள் இல்லை என தெரிய வந்திருக்கிறது.

அதாவது, CMDA பணிக்கான வயது வரம்பு 30 ஆக நிர்ணயித்திருந்த நிலையில் 39 வயதான ஒருவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பட்டப்படிப்பு தகுதி பெற்றதற்கான காலி பணியிடத்துக்கு பட்டமே பெறாதவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு முறைகேடு செய்து அரசு பணியில் சேர்ந்த 18 பேரை சி.எம்.டி.ஏ நிர்வாகம் பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவெடுத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தேர்வு முறைகேட்டு விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு CMDA அதிகாரிகளுக்கும் நோட்டிஸ் விடுத்து

15 நாட்களுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Also Read: அதிமுக ஆட்சியின் முறைகேடு: அரசு பணத்தில் வாங்கிய 10 கார்களை தனது பெயருக்கு மாற்றிய தனியார் நிறுவனம்!