Tamilnadu

3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை; சிகிச்சை பலனின்றி பலி: சென்னை மண்ணடியை சூழ்ந்த சோகம்!

சென்னை மண்ணடி இப்ராஹிம் சாகிப் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி இவரது மனைவி யாஸின். செல்வகனி பர்மா பஜாரில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. நேற்று வழக்கம்போல் செல்வகணி கடைக்கு சென்ற நிலையில் யாசின் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணி அளவில் ஒன்றரை வயது மூன்றாவது குழந்தை ஆஃபியா உடன் பால்கனியில் இருந்துள்ளார்.யாஸின் வேலை காரணமாக சமையலறைக்குச் சென்ற சமயத்தில் தனியாக இருந்த குழந்தை பால்கனியில் இருந்த கம்பி வழியாக தவறிக் கீழே விழுந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஏழுகிணறு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுகார்பேட்டை மண்ணடி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. அங்கு பால்கனியில் பாதுகாப்பின்றி இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதால் அடிக்கடி குழந்தைகள் தவறுதலாக கீழே விழுந்து விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

வீடுகள் கட்டும் போதே போதிய கவனம் செலுத்தி மாடிகளில் பாதுகாப்பை உறுதி செய்து பால்கனிகள் அமைக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: ’அவர்தான் என்ன வரச் சொன்னாரு’ - கணவர் இறந்ததால் மனச்சோர்வு; கிணற்றில் குதித்த மனைவி - சென்னையில் பரபரப்பு