Tamilnadu
“எந்நேரமும் இதையே விளையாடக்கூடாது” : கண்டித்த பெற்றோர்... மனமுடைந்து விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவன்!
நெல்லை மாவட்டம் மன்னார்புரத்தை அடுத்த இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வள்ளிமயில். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சஞ்சய் தடை செய்யப்பட்ட ஃப்ரீபயர் ஆன்லைன் கேமை தனது செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டித்தும் சஞ்சய் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதையடுத்து சஞ்சய் வீட்டில் ஃப்ரீபயர் விளையாடியதைப் பார்த்த பெற்றோர் அவரை கடுமையாகத் திட்டி கண்டித்துள்ளனர். இதனால் மாணவன் சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
T20 உலகக்கோப்பைக்கு தயாரான வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா - தேர்வுக்குழு சொல்வது என்ன? : முழு விவரம்!
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடல் 2.0-விற்கு மகுடம் சூட்ட போகும் பெண்கள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!