Tamilnadu
“யானையை காப்பாற்றச் சென்ற புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பலி”: ஒடிசாவில் மீட்பு பணியின் போது நடந்த சோகம்!
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மகாநதி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முண்டாலி என்ற பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்ற யானை ஒன்று மகாநதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழு யானையை மீட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் என்பவரும் மீட்பு பணியில் ஈடுபட்டார். அப்போது யானை ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், மீட்புக்குழு படகில் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து படகு தண்ணீல் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இதில் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதிரடி மீட்புக் குழுவில் உள்ள வீரர் ஒருவர் ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புகைப்படக்காரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அசாம் மாநிலத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுருண்டு விழுந்தவரை புகைப்படக்காரர் ஒருவர் ஏரி மித்தித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் யானையைக் காப்பற்ற ஒடிசாவில் பத்திரிக்கையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!