Tamilnadu
பானிபூரி பிரியர்களே உஷார்: கெட்டுப்போன மசாலாக்குள் புழு; சென்னையில் வட மாநில இளைஞரை துவம்சம் செய்த மக்கள்
பானி பூரிக்குள் வைக்கப்படும் மசாலாக் கிழங்கில் புழு இருந்ததை கண்டறிந்த பொது மக்கள் வடமாநில இளைஞரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தள்ளுவண்டியில் பானிபூரி விற்று வந்த வடமாநில இளைஞரிடம் சிலர் பானிபூரி வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.
அப்போது பசி காரணமாக வடமாநில இளைஞர் தயார் செய்வதற்கு முன் தாங்களே பானி பூரில் மசாலா உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்கள்.
அப்போது, உருளைக்கிழங்கு மசாலாவில் ஒருவிதமான துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனையடுத்து தொடர்ந்து சோதித்ததில் மசாலாவில் புழு இருந்ததை கண்டறிந்து அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள்.
இதுபோக, பழைய உருளைக்கிழங்கு மசாலாவை தொடர்ந்து பானிபூரி விற்பவர் சூடு செய்து விநியோகித்ததும் மக்கள் விசாரித்ததில் தெரியவந்திருக்கிறது.
இதனால் கொதிப்படைந்துபோனவர்கள் அந்த வடமாநிலத்தவரை பிடித்து அடித்து துவம்சம் செய்ததோடு, பானி பூரி தயாரிக்கும் இடத்திற்கே சென்று அங்கிருந்த உரிமையாளர் உட்பட இருவரை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த செய்தி இணையத்தில் பரவி பானி பூரி பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Also Read
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!