Tamilnadu
கருத்துவேறுபாடு.. காப்பகத்தில் தங்கிய மனைவி - ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய கணவன்: தேனியில் பயங்கரம்!
திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு புவனேஸ்வரன் என்ற குழந்தை உள்ளது. இதையடுத்து கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரைப் பிரிந்து உமா மகேஸ்வரி தேனியில் உள்ள அத்தை வீட்டில் தங்கி வந்தார்.
அப்போதும் கூட, துரைப்பாண்டி அங்குச் சென்று மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவர் மீது மகளிர் காவல்நிலையத்தில் உமா மகேஷ்வரி புகார் கொடுத்தார். பின்னர் குழந்தையுடன் உமா மகேஷ்வரி காப்பகம் ஒன்றில் தங்கிவந்தார்.
இந்நிலையில் திடீரென காப்பகத்திற்கு வந்த துரைப்பாண்டி மனைவி உமா மகேஷ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தம்பிச் சென்றுள்ளார். பின்னர் காப்பக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவர் துறைப்பாண்டியை தேடி வருகின்றனர். கணவனே மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!