Tamilnadu

பிரியாணி பிரியர்களே உஷார்.. 20 கிலோ கெட்டுப்போன பிரியாணி பறிமுதல் : ஹோட்டல்களில் தொடரும் ரெய்டு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட சிறுவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் சாய்நாதபுரம், ஆம்பூர், பாகாயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சோதனையில் உணவு கடையில் இருக்கும் இறைச்சிகள் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல கடைகளில் தரமற்ற இறைச்சிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் கெட்டுபோன இறைச்சிகளைக் கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ சிக்கன், மாட்டிறைச்சி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளைக் குழிதோண்டிப் புதைத்தனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட உணவகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கியுள்ளனர். தொடர்ச்சியாக உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது உணவு பிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பானிபூரி பிரியர்களே உஷார்: கெட்டுப்போன மசாலாக்குள் புழு; சென்னையில் வட மாநில இளைஞரை துவம்சம் செய்த மக்கள்