Tamilnadu
நகை திருட்டு வழக்கில் தந்தை கைது.. சோகத்தில் மகன் தற்கொலை - மகன் தற்கொலையால் விபரீத முடிவு எடுத்த தந்தை!
திருவண்ணாமலை மாவட்டம் அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உஷாராணி. இவருடைய மகன் கோகுல் என்பவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், விஜயகுமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செய்யாற்று வென்றான் என்ற கிராமத்தில் முருகன் என்பவரது வீட்டில் இரண்டு சவரன் நகை திருடியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க விஜயகுமாரை போலிஸார் அழைத்துச் சென்றனர்.
பின்னர், திருட்டு வழக்கில் தந்தையை அழைத்துச் சென்றதால் மனைவி உஷாராணி, மகன் கோகுல் ஆகியோர் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதுமக்களால் மீட்கப்பட்ட உஷாரானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து மகன் தற்கொலை செய்து கொண்டு இறந்ததை அடுத்து இறுதி நிகழ்ச்சிக்காக விஜயகுமாரை போலிஸார் அனுமதித்தனர். பின்னர் இறுதி நிகழ்ச்சி முடிந்து வீட்டிலிருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில் விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிறகு விஜயகுமாரின் உடலை மீட்ட போலிஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சவரன் நகைக்கு ஆசைப்பட்டு தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!