Tamilnadu
மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!
பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்களுக்கு எதிரான சட்டங்களையே கொண்டுவந்துள்ளது. குறிப்பாக புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற சட்டங்களை அமல்படுத்தி மக்களை வஞ்சித்து வருகிறது.மேலும் விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புப் கொடி ஏந்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை அன்பகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதேபோல், சென்னை சிஐடி காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் அண்ணா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.
இதேபோல் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.முக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மக்களை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டது தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!